இதோ இந்த பாடலின் தாக்கம் என்னுள் ஏற்படுத்தும்
கிளர்ச்சியான அனுபவம் பற்றி பிறிதோர் சமயம் பகிர போகிறேன்
எங்கிருந்தோ அழைக்கும் உன் கீதம்
என் குரலில் கலந்தே அது பாடும்
சேர்ந்திடவே உனையே ..ஓ...
ஏங்கிடுதே மனமே
(எங்கிருந்தோ )
வசந்தமும் இங்கே வந்ததென்று
வாசனை மலர்கள் சொன்னாலும்
தென்றலும் இங்கே வந்து நின்று
இன்பத்தின் கீதம் தந்தாலும்
நீ இன்றி ஏது வசந்தம் இங்கே
நீ இன்றி ஏது ஜீவன் இங்கே
சேர்ந்திடவே உனையே ..ஓ ...
(எங்கிருந்தோ )
காதலில் உருகும் பாடல் ஒன்று
கேட்கிறதா உன் காதினிலே
காதலில் உயிரை தேடி வந்து
கலந்திட வா ஏன் ஜீவனிலே
உயிரினை தேடும் உயிர் இங்கே
ஜீவனை தேடும் ஜீவன் இங்கே
சேர்ந்திடவே உனையே ..ஓ ...
(எங்கிருந்தோ )
![Photo: ந.பெரியசாமியின் ' மதுவாகினி' கவிதைத் தொகுப்பினை முன்வைத்து...
வாழ்வியங்குதலின் பொருட்டு இடம் பெயர்ந்த ஒரு கிராமிய மனிதனின்
அவலங்களையும்,ஆதங்கத்தையும்...
தீரவே தீராத காதலையும், முடிவுறா காமத்தையும்
முன் வைக்கிறாள்...மதுவாகினி....
"மெய் வருத்தம்"
வெப்பம் வேண்டித் தவிக்கும்
அதிகாலை மலரின் ஆவலில்
சுண்டக் காய்ச்சிய முத்தமிட்டு
வலிவடிய உரையாட நினைப்பதுண்டு....
என்ன செய்ய
கண்ணசந்து விடுகிறேன்*****
பக்.14
யாரோ யாருக்காகவோ எழுதியதென
கடந்து போகாது
சிறு சலனப்படின் போதுமெனக்கு.****
பக்.37*
கிராமிய மணங்கமழும் நினைவுகளை கருப்பு சிலேட்டில்
குச்சியால் எழுதிப் பார்க்கும்
மனோபாவத்தில் கவிதை வரிகள் பதிகின்றன..
அரசியல்.. சமூக அநீதிக்கு எதிராக... எதிராக...
[இசை யின் கவிதை ஞாபகத்துக்கு வந்து தொலைக்கின்றது...)
*குடும்ப நாய்கள்
அநீதிக்கு எதிராக
தினமும் இரண்டுமுறை
குரைத்து விடுகின்றன...*
அரசியல்.. சமூக அநீதிக்கு எதிராக...
ஈழ வதையில்
வழிந்த ரத்தங்களை வாக்குக்காக
மணக்க மணக்க வதக்கியபடி இருக்கிறார்கள்
ஒரே சட்டியில் இரு அகப்பையோடு...****
பக்.19*
எவ்வித சமரசமும் செய்து கொள்ளாமல் எதிர்க்குரல் கொடுக்கிறார் கவிஞர்.
வீட்டுச் சுவர்களில் குழந்தைகள் கிறுக்கும் மாய உலகத்தில் மனம் நிறைந்த
குதூகலத்துடன்
பவனி வருகிறார்.
எனக்கு இத்தொகுப்பில் சிறப்பான படைப்பாக..
நதிகளை பூட்டிக்கொண்டிருப்பவன்
பக்.44
கொழுத்துக் கிடக்கும் மேய்ச்சல் நிலத்தில்
பதற பதற தின்று விட்டு...
மரத்தடியில்
அமர்ந்து நிதானமாக அசைபோடும்
மாட்டைப்போல்
மது வாகினியை
நிதானித்து உள்வாங்கினால்... ரசிக்கலாம்
சராசரி வாசக மனதுக்கு வேலை வைக்கும் வார்த்தை ப்ரயோகங்கள், மதுவாகினியின்
பலமாகவும் அதேசமயம் பலவீனமாகவும் உள்ளன.
[மதுவாகினி.....ரூ.70/- அகநாழிகை பதிப்பகம்.]](https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-prn1/c0.0.843.403/p843x403/12965_543710422325977_1892021382_n.jpg)