Tuesday, 20 August 2013



                              சதுரங்கநாயகன்

1-ம் தேதி..ஊதியம் பெற்ற நம் கதாநாயகன்..பட்ஜெட் போடும் முன்..படக்கென்று...2... 100 ரூபாய்த்தாள்களை மட்டும் பனியனின் உள்ளே செருகிகொள்கிறான்.....பரபரவென்ற உற்சாகத்துடன்....கிளம்புகிறான்...
ஸூஊஊஊஊ......விசிலோடு....

அமர்க்களமாக...வீட்டுக்குள் நுழையும்முன்...செருப்பு வைக்கும் இடத்தில்
ஒரு பார்வை..அப்பாடா..யாரும் வரவில்லை...ஒரு நிம்மதியுடன்...

தே.....[என்ன இது(!) என்று வியப்புடன் பார்க்கும்....வாசகர்களுக்கு  நாயகன் மனைவியை அன்புடன் அழைக்கும் ஒரு சொல்]

வர்றேங்க.......நாயகனின் மனைவி...

இந்த...

எவ்ளோ இருக்கு...

ம்ம்..இருக்குறதுதான் இருக்கும்....பாங்கே வீட்டுக்கு கொண்டுவந்தாலும் உனக்கு பத்தாது....

சரி சரி....டீ சாப்புடறீங்களா....

வேண்டாம்..நான் வெளியே போறேன்..

சாப்பிட...

வேண்டாம்

நேரத்தோட வாங்க...

எங்களுக்கு தெரியும்.....

நடந்தே கிளம்பும் நாயகனின் கால்கள்...சேர்ந்த இடம்.....



அவன் கால்கள் நின்ற இடம்....மதுபானக்கடை.... .
ரூபாய் கைமாற...பாட்டில் இவன் வசம் வந்தது...உள்ளே சென்றதும் உள்ளே சற்று தள்ளி ஒரு ஓரமாக இருவர் மட்டுமே அமரும் மேஜைக்கு சென்று அமருகிறான்.....
12 வயது குடும்பதலைவன் அருகே வந்து..உணர்ச்சியற்ற கண்களாலே என்ன வேண்டும் என கேட்கிறான்...நாயகனும் ஏதோ சொல்கிறான்...அரையிருட்டில்  ஏகமான இரைச்சலில் நம் காதில் சரியாக விழவில்லை...சரி பொறுத்து பார்ப்போம்... தண்ணீர்பாட்டில்...சோடா..கண்ணாடி தம்ளர்... மேசையின்..வெறுமையை நிறைத்தன..மதுபாட்டிலையும் திறந்து வைக்கிறான் நம் நாயகன்.
சுற்றிலும் நோட்டமிட்டு..அந்த நேரத்து இருளையும்.. இரைச்சலையும்..அந்த இடத்துக்கே உண்டான ஒரு வாசனையையும் கண நேரம் உள்வாங்குகிறான்...
ஒரு பெருமூச்சுடன்...குவளைக்குள்..மதுவை ஊற்றுகிறான்... 1பங்கு..சோடாவும் ஜோடி சேருகிறது...அதிலிருந்து கிளம்பு நுரை குமிழிகளில்..
ஏதோ உலகம் இயங்குவதை கவனிக்கிறான்.....முதுகுதண்டில்..ஒரு சிலிப்பு ஆரம்பிக்கிறது...புட்டத்தின் மேற்புறத்திலிருந்து  ஒரு குமிழி ஒன்று..தண்டுவடத்தின் வழியே மேல்நோக்கி பயணிக்கிறது...உடம்பின் எல்லா ரோமக்கால்களிலும் ஒரு சிலிர்ப்பு.......
லேசாக நடுங்கும் கைகள் குவளையை எடுத்து இதழ்களில் பொருத்துகிறான்.
மது அவனை குடிக்க ஆரம்பித்தது...உள்ளே செல்ல செல்லவே உறைந்துபோயிருந்த செல்களை எல்லாம் உயிர்பித்து கொண்டே சென்றது...சூடேறிய ரத்தம் மூளையை தாக்க....விழி விரிய வெறிக்கிறான்.விழிஓரத்திலும்..அவன் இதழ்கோட்டிலும் ஆரம்பித்து விரிசல் விட்ட முகமூடியை உரித்து எடுக்கிறான்.....ஆக...யாரிவன்..?நானேதான்.

மதுவுக்குள் மூழ்கியவன்..எழுந்த இடம் அஸ்தினாபுரம்...

மதுபானக்கடை....அரண்மனை தார்பாராகியது.....மேசையை சூதாட்ட பலகையாக விரித்து...பகடை உருட்டப்படுகிறது....

பரிமாற வந்தவன் சகுனியாகி போகிறான்...

எத்தனை..?

ஆறு....

ஆஹ....6...

தோற்று விட்டாயடா..தர்மா...இழுத்து வாருங்கள்....ஐவரின்மனைவியை...
திரவுபதிக்கு ஒரு போன் பண்ணி பேசட்டா?

ஹலோ....நான் தோத்துட்டேன்...
சரி...உன்னை வைச்சுதான் ஆடினேன்...

அடபாவி யாரை கேட்டு ஆடின...ஏன் சுபத்ரா..இல்ல இடும்பிய வைச்சு ஆடிருக்கலாமல்ல...

சுபத்ராவ கேட்டா..அர்ச்சுன சும்மா இருப்பானா செவிட்டுல குத்துவான்....இடும்பியகேட்டா..ஹா...இந்த அரண்மனையவே இடிச்சுபோடுவான் பீம...
நீ பொது சொத்து....ஆகவே உன்னை பணையம் வைப்பது என் உரிமை...

கண்ணா......

அவர் கல்லாவுல உட்கார்ந்து இருக்கார்..இப்போதைக்கு வரமாட்டார்....

ராவணா...இந்த அண்ணன் தம்பிக தொல்லை தாங்க முடில என்னை கடத்திட்டு போயிரு...அசோகவனத்திலாவது நிம்மதியா இருக்கேன்..

ராவணன்  :- தாயே நான் சிவபக்தன் அல்லவா...வரம் கொடுப்பது என் வேலை...
இவங்க பிரச்சனை முடியும் வரை அசோக வனத்தில் தாரளமாக இருக்கலாம் வாருங்கள்...

அய்யோ..அய்யோ....திரவுபதிய..ராவணன் கடத்திட்டு போறான்..

ஹ...தர்மா..பாதில நீ எந்திரிக்க கூடாது...ஆட்டத்தை முடி....

நான் தோத்துட்டேன்...அதனால...இனி போர்தான்

பூம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்....

பீமனின் பொளண்ட்ரம் ஒலிக்கிறது.....ரத்தவெள்ளம்...யானை பிளிறல்...குதிரைகளின்..கனைப்பு.....வாள்,வேல் ஒலிகள்...

சர்வ நாசம்

மிஞ்சியது இரண்டு ராஜாக்கள்..மட்டுமே..

துரியா என்னை தனியாவிட்டு போகதே....கதறுகிறான் தர்மன்..

இல்லை என் வேசம் முடிஞ்சுது...என்னை கொல்லு....நான் போகணூம்..

யாருமே இல்லையே.....தேசத்துல..யாருமே இல்லையே....ஜெயிச்சவனுக்கு..எல்லாம் சொந்தம்...தனியா நிக்குறேனே...

சூதுப்பலகையில்.....வென்ற ராஜன் மட்டும் நிற்கிறான்....

சார் கடைய சாத்தனும்..போலீஸ் வருவாங்க....சகுனி....12 வயது குடும்பதலைவனாக மாற....அரண்மனை...மதுபான கடையாகிறது...


ம்ம்...ம்ம்ம்...சரி..

நாயகன் எழுத்து...பாதங்களையே பார்த்தவாறு நிதான நடைபோடு ... வெளியேறுகிறான்.....ஆளில்லாத ரோட்டில் ஒரு விளக்கு கம்பம் மட்டும்....
ஒவ்வொரு மனிதனும் எதையோ வென்று...எதையோ தோற்று..தனியாளாக போனான்...சதுரங்க நாயகன்....

படையோடு வந்தவன்...தனியனாக வாழ்வதும்..தனியனாக சாவதும்..இந்த உலகம் நிர்ணயித்த...கொடூரனியதிகளில் ஒன்று....

எஃப்.எம் ரேடியோ ஜானகி குரலில் தேன் வழிகிறது ‘ துன்பமென்றும் ஆணுக்கல்ல அது அன்றும் இன்றும் பெண்களுக்கே’ ..

ப்ரபாகர் சிவசுப்ரமணியம்.

Saturday, 8 June 2013

கவிஞர் வசந்த் செந்தில் மன்னித்துவிடுவார் என்ற நம்பிக்கையில்...

அத்தனை வாகனங்களும் கைவிட
நெடுஞ்சாலையின் கோடைதகிப்பில்
தொண்டை இறந்து நின்றிருந்தேன்.

க்ரக்ஸ் 5001 வண்டியினை ஓட்டியபடி
வந்தவர் தன்னிடமிருந்த நீரை
என்னை அருந்தச் சொன்னார்.

' நீங்கள் கடவுள்' என்றேன் உடைந்துபோய்.
'இல்லை.நான் ப்ரபாகர் சிவசுப்ரமணியன்' என்றார்
சிரித்தபடி.

வண்டியின் பின்னால் ஏறி
என் வசிப்பிடம் வந்து
கையசைத்து விலகிப்போகும்போது கவனித்தேன்

புன்னகைத்து நின்றிருந்தவர்
கடவுள் போலில்லை.
ப்ரபாகரன் சிவசுப்ரமணியன் போல்தான் இருந்தார்.

Prabhakar Sivasubramaniam
என்ன செய்யும் என்னை இந்த நட்பு
மடியேந்துகிறதுதலைகோதுகிறதுஅமுதூட்டுகிறது
என்ன செய்யும் என்னை இந்த நட்புசிரிப்பூட்டுகிறதுகளிப்பூட்டுகிறதுவிழிப்பூட்டுகிறது
என்ன செய்யும் என்னை இந்த நட்புதவிப்பூட்டுகிறதுசலிப்பூட்டுகிறதுவெறுப்பூட்டுகிறது
என்ன செய்யும் என்னை இந்த நட்புகரமேந்துகிறதுதரம் தாழ்த்துகிறதுசிரம் வீழ்த்துகிறது
என்ன செய்யும் என்னை இந்த நட்புஉளம் மீட்கிறதுஉடல் சேர்க்கிறதுஉயிர் கேட்கிறது
இன்னும் என்னை என்ன செய்யும்சாவு விளிம்பில் நிறுத்தி வைத்துதள்ளிவிடும் பாவனையில்தினம் விளையாடும் உன் நட்பு.


கணேசகுமாரன்

Thursday, 9 May 2013












 ஒரு ஊரில ஒரு ராஜகுமாரி



அவளும் அழகியாக இருந்தாள்
அந்த கருப்பு வெள்ளை புகைப்படத்தில்
அழியாத பதிவாக இன்னும் இருக்கிறது...
கடைசி வரை வராத
அவளது ராஜகுமாரனின் துரோகமும்..


Tuesday, 30 April 2013





           பயணம்


காலை 80 கி.மீ. 

திரும்பும் போது 40 கி.மீ. 

இருட்டு,களைப்பு. 

நினைவில் மகனுக்கு உணவூட்டும் மனைவி.. 

அந்த சொர்கத்தில் சேர்ந்திருப்பான்

4784 லாரி மட்டும் மோதியிராவிடில்.

Tuesday, 23 April 2013

ஒரு துயரத்தை வதைத்தல்



பெருந்துயரொன்று உறவு கொண்டாடி வந்தது 
திருவிழாவாக்கத் தீர்மானித்தேன்.
தீவுத்திடலுக்கு அழைத்துச் சென்றேன்
சந்தடியில் மிரண்டு  கையை இறுக்க பற்றிக்கொண்டது
ராட்சத சக்கர ராட்டினத்தில் 40 ரூபாய் சீட்டு பெற்று அருகே இருத்திக்கொண்டேன்.. வானுக்கும் மண்ணுக்கும்  உற்சாகத் தாண்டவம் வாய்விட்டு அலறியது.
அடுத்து மரணக்கிணறு

கைகொட்டிச் சிரித்தது இரண்டு சக்கரங்களும் எஞ்சினும் ஹேண்டில் பார் மட்டுமே இருந்த வாகனத்தில் பின்னிருத்திக் கொண்டு சாய்வான மரச்சுவர்களில் தடதட தடவென  மரண யாத்திரை... இடுப்பை இறுக பற்றிக்கொண்டு காதருகில் கத்தியது... 
’தயவு செய்து நிறுத்தி விடு...மூத்திரம் முட்டுது’ வெளியே வந்ததும் வாயிலெடுத்தது.
இன்னிசைக் கச்சேரியில் ‘அட்ராரா நாக்க முக்க...’
ஆட்டம்... பேயாட்டம்...சாமியாட்டம்...
தள்ளாடிய இரண்டு கால்களும் நடுநடுங்கின. மைக்கில் சொன்னேன் காதல் கவிதையொன்று...

உயிரின்றி வாழ்வேன்...துயரே  நீயின்றி வாழ்வேனா?
அவ்வளவுதான்...
மதுக்குப்பியைக் கையில் திணித்துவிட்டு எகிறிக் குதித்து இருளில் ஓடி மறைந்தது ஓடிப்போனதை கொண்டு வந்து சீராட்ட நானென்ன மானங்கெட்டவனா? மதுவருந்த எப்போதும் ஒரு துயர் வேண்டுமெனக்கு இன்றைக்கு என் மதுக்குவளை தீர
பெருந்துயர் ஓடிப்போன சிறு துயர் போதும். மதுவருந்த எப்போதும்  துயர் வேண்டுமெனக்கு இன்றைக்கும் நிம்மதியாக மதுவருந்தலாம்...

Tuesday, 16 April 2013









நகரம் கண்டதை தின்று 

பருத்துக் கொண்டே செல்கிறது..


இயற்கை தன்னியல்பை சுருக்கி கொண்டிருக்கிறது..


ஆறுகள் மரணிக்கும் தருவாயில்


ஜீவ நீர் கேட்டு  தவிக்கின்றன.


கார்பன் டை ஆக்ஸைடை சுவாசித்து


ஆக்சிஜனைத் தரும் மரங்கள் அருகிவிட


நகர வெம்மையில் கருகிப்போன மனம்

ஓர் ஆதி வாழ்க்கைக்கு ஆசைகொண்டு
அலைகிறது.

வனம் வளர்க்கக் கடன் கொடுக்கும்


வங்கிகள் ஏதும் உண்டா இழந்த வளம் மீண்டெடுக்க.

Thursday, 28 March 2013










இறைவா....
என்னால்
என் பாவ புண்ணியங்களை பற்றியும் 
சிந்திக்க தெரியவில்லை
 
என் பிறப்பு இறப்பு பற்றியும் 
தெரிந்து கொள்ள முடியவில்லை..

பின் எப்படி 
உன் படைப்பியல்பின் நுட்பத்தை

என்னால் அறிந்து கொள்ள முடியும்..
 
உன்னை என் நெஞ்சில்

எப்போதும் இருத்தி வைத்திருக்க
மட்டுமே

அறிந்திருக்கிறேன்.....
எனை வழி நடத்து....
இந்த உலகம் எனக்கு அறிய சிறுவன் 
ஒருவனின் பார்வையில்தான்
இன்னும் சுழலுகின்றது....
 

 
 
 
 
காதல் வலி
உலகின் எங்கோ
 
ஒரு மூலையில்
 
பெண்ணால் பாதிக்கபட்டு
 
அவள் நினைவால்
 
இன்றளவும்
 
மனம் கொதித்தால்
 
நாம் இருவரும்
 
நண்பர்களே .....
 
##################################
 
துடிக்கும் இதயத்திற்கு ஏனோ
 
தெரிவதில்லை-
 
துடிக்க வைத்ததும் அவள் தான்
 
தவிக்க வைத்ததும் அவள் தான்
 
துடிப்பும் தவிப்பும் வெவ்வேறல்ல என்றே
 
இயங்குகின்றது இதயதசைகள்
 
அவளை நினைத்து கொண்டிருக்கையில்......
 

Tuesday, 26 March 2013

.
நான் சாத்தான்.

வாலும் கொம்பும் இல்லாத சாத்தான்.

 
நான் கடவுளிடம் யாசித்து பெற்றவொரு

வசீகரப் புன்னகையால்

உலகின் முதல் பெண்

ஆப்பிள் கடித்தாள்.

உலகின் கடைசி பெண்ணும்

சயனைடு கலந்த பெப்சியை

பருக போகிறாள்.

ய்ய்ய்யாஆஆஆஆஆஅஹூஊஊஊஊஊஊ.











என்னிடம்  நிறைவுறாத 

கோணல் கவிதை ஒன்று இருக்கிறது......

அதன் மொழி அறிந்தவன் 

வேற்று கிரகத்தில் வசிப்பதாக

சற்று முன்

மின்னஞ்சல் வந்தது....




நீரில் வாழப் பிடிக்காத மீனொன்று... 
அடிக்கடி என் வலைக்குள் விழுகிறது... 
அதை கொல்ல மனமில்லை.. 
குளத்தில் எறிந்த மறுகணம் 
வலைக்குள்ளே துடிக்கிறது... 
மச்சம் சொல்கிறது.. 
துடிப்பதும் தவிப்பதும் மிக விருப்பம் ...

Monday, 25 March 2013




அன்பைப் புரிஞ்சுக்கலையேனு வருத்தப்படுறது போல
முட்டாள்தனம் எதுவுமே இல்லை...... அடக்கடவுளே... 
அன்பை உணரத் தெரியலையேனு எதிராளியைப் பார்த்து... 
சிரிச்சுகிட்டுப் போயிகிட்டே இருக்கணும்!
அப்படி இல்லாம சகிச்சுக்கப் பழகினா... 
ஒருகட்டத்துல அந்தச் சகிப்புத் தன்மை மேலயே நமக்கு சலிப்பு வந்து, 
அன்பா இருக்கற இயல்பிலேருந்து விலக ஆரம்பிச்சிருவோம்!
உணரத் தெரியாதவங்களை உணர்ந்து நடந்துக்கணுங்கறது... 
ரொம்பவே முக்கியம்!

Friday, 22 March 2013



 பொம்பள பொறுக்கி.



அவனுக்கு..பொம்பள பொறுக்கி..
என்று ஊருக்குள்...பெயர்...
புருசனில்லாத பொன்னாத்தாவுடன் தொடுப்பு..
கூத்து கட்ட ஊருக்கு வந்த ரோசமணியுடன்....களிப்பு..
பெட்டிக்கடை கண்ணாத்தாவுடன் ஒரே இளிப்பு..
மீச மொளச்ச நாளேருந்து இதே பொழப்பு...
ஒரு நாள்..
ஊருக்கு புதுசா வந்தா ஒரு பிச்சி..
அரச மரத்தடில...இளிப்போட நின்னா
அவ அம்மணத்த ஊரே கூடி வேடிக்க பார்க்குது..

பொறுக்கி பய..
படார்ன்னு இடுப்பு வேட்டிய அவுத்து
அவளுக்கு போத்திவிட்டான்
துண்ட அவுத்து
இறுக்க கட்டிவிட்டான்..

அவம் பாட்டுக்கு
கண்ணாத்தா கடைக்கு போயி
பீடி குடு கண்ணாத்தான்னு..கேக்க...
எப்பவும் இளிக்குறவ..
ராசான்னு...கதறி..போட்டா.....

Saturday, 23 February 2013



இதோ இந்த பாடலின் தாக்கம் என்னுள் ஏற்படுத்தும்
கிளர்ச்சியான அனுபவம் பற்றி பிறிதோர் சமயம் பகிர போகிறேன்



எங்கிருந்தோ அழைக்கும் உன் கீதம் 

என் குரலில் கலந்தே அது பாடும் 

சேர்ந்திடவே உனையே ..ஓ...

ஏங்கிடுதே மனமே 

(எங்கிருந்தோ )

வசந்தமும் இங்கே வந்ததென்று 

வாசனை மலர்கள் சொன்னாலும் 

தென்றலும் இங்கே வந்து நின்று
 இன்பத்தின் கீதம் தந்தாலும் 

நீ இன்றி ஏது வசந்தம் இங்கே 

நீ இன்றி ஏது ஜீவன் இங்கே 

சேர்ந்திடவே உனையே ..ஓ ...

(எங்கிருந்தோ )

காதலில் உருகும் பாடல் ஒன்று 

கேட்கிறதா உன் காதினிலே 

காதலில் உயிரை தேடி வந்து 

கலந்திட வா ஏன் ஜீவனிலே 

உயிரினை தேடும் உயிர் இங்கே 

ஜீவனை தேடும் ஜீவன் இங்கே 

சேர்ந்திடவே உனையே ..ஓ ...

(எங்கிருந்தோ )

Tuesday, 19 February 2013


ந.பெரியசாமியின் ' மதுவாகினி' கவிதைத் தொகுப்பினை முன்வைத்து...

வாழ்வியங்குதலின் பொருட்டு இடம் பெயர்ந்த ஒரு கிராமிய மனிதனின்
அவலங்களையும்,ஆதங்கத்தையும்...
தீரவே தீராத காதலையும், முடிவுறா காமத்தையும்
முன் வைக்கிறாள்...மதுவாகினி....

"மெய் வருத்தம்"

வெப்பம் வேண்டித் தவிக்கும்
அதிகாலை மலரின் ஆவலில்
சுண்டக் காய்ச்சிய முத்தமிட்டு
வலிவடிய உரையாட நினைப்பதுண்டு....
என்ன செய்ய
கண்ணசந்து விடுகிறேன்*****
பக்.14

யாரோ யாருக்காகவோ எழுதியதென
கடந்து போகாது
சிறு சலனப்படின் போதுமெனக்கு.****
பக்.37*


கிராமிய மணங்கமழும் நினைவுகளை கருப்பு சிலேட்டில்
குச்சியால் எழுதிப் பார்க்கும்
மனோபாவத்தில் கவிதை வரிகள் பதிகின்றன..

அரசியல்.. சமூக அநீதிக்கு எதிராக... எதிராக...
[இசை யின் கவிதை ஞாபகத்துக்கு வந்து தொலைக்கின்றது...)

*குடும்ப நாய்கள்
அநீதிக்கு எதிராக
தினமும் இரண்டுமுறை
குரைத்து விடுகின்றன...*

அரசியல்.. சமூக அநீதிக்கு எதிராக...

ஈழ வதையில்
வழிந்த ரத்தங்களை வாக்குக்காக
மணக்க மணக்க வதக்கியபடி இருக்கிறார்கள்
ஒரே சட்டியில் இரு அகப்பையோடு...****
பக்.19*
எவ்வித சமரசமும் செய்து கொள்ளாமல் எதிர்க்குரல் கொடுக்கிறார் கவிஞர்.


வீட்டுச் சுவர்களில் குழந்தைகள் கிறுக்கும் மாய உலகத்தில் மனம் நிறைந்த
குதூகலத்துடன்
பவனி வருகிறார்.



எனக்கு இத்தொகுப்பில் சிறப்பான படைப்பாக..
நதிகளை பூட்டிக்கொண்டிருப்பவன்
பக்.44

கொழுத்துக் கிடக்கும் மேய்ச்சல் நிலத்தில்
பதற பதற தின்று விட்டு...
மரத்தடியில்
அமர்ந்து நிதானமாக அசைபோடும்
மாட்டைப்போல்
மது வாகினியை
நிதானித்து உள்வாங்கினால்... ரசிக்கலாம்

சராசரி வாசக மனதுக்கு வேலை வைக்கும் வார்த்தை ப்ரயோகங்கள், மதுவாகினியின்
பலமாகவும் அதேசமயம் பலவீனமாகவும் உள்ளன.

[மதுவாகினி.....ரூ.70/- அகநாழிகை பதிப்பகம்.]
3Like ·  · Promote ·