.........சதுரங்க நாயகன்......
அவன் கால்கள் நின்ற இடம்....மதுபானக்கடை.... .
ரூபாய் கைமாற...பாட்டில் இவன் வசம் வந்தது...உள்ளே சென்றதும் உள்ளே சற்று தள்ளி ஒரு ஓரமாக இருவர் மட்டுமே அமரும் மேஜைக்கு சென்று அமருகிறான்.....
12 வயது குடும்பதலைவன் அருகே வந்து..உணர்ச்சியற்ற கண்களாலே என்ன வேண்டும் என கேட்கிறான்...நாயகனும் ஏதோ சொல்கிறான்...அரையிருட்டில் ஏகமான இரைச்சலில் நம் காதில் சரியாக விழவில்லை...சரி பொறுத்து பார்ப்போம்... தண்ணீர்பாட்டில்...சோடா..கண்ணாடி தம்ளர்... மேசையின்..வெறுமையை நிறைத்தன..மதுபாட்டிலையும் திறந்து வைக்கிறான் நம் நாயகன்.
சுற்றிலும் நோட்டடிட்டு..அந்த நேரத்து இருளையும்.. இரைச்சலையும்..அந்த இடத்துக்கே உண்டான ஒரு வாசனையையும் கண நேரம் உள்வாங்குகிறான்...
ஒரு பெருமூச்சுடன்...குவளைக்குள்..மதுவை ஊற்றுகிறான்... 1பங்கு..சோடாவும் ஜோடி சேருகிறது...அதிலிருந்து கிளம்பு நுரை குமிழிகளில்..
ஏதோ உலகம் இயங்குவதை கவனிக்கிறான்.....முதுகுதண்டில்..ஒரு சிலிப்பு ஆரம்பிக்கிறது...புட்டத்தின் மேற்புறத்திலிருந்து ஒரு குமிழி ஒன்று..தண்டுவடத்தின் வழியே மேல்நோக்கி பயணிக்கிறது...உடம்பின் எல்லா ரோமக்கால்களிலும் ஒரு சிலிர்ப்பு.......
லேசாக நடுங்கும் கைகள் குவளையை எடுத்து இதழ்களில் பொருத்துகிறான்.
மது அவனை குடிக்க ஆரம்பித்தது...உள்ளே செல்ல செல்லவே உறைந்துபோயிருந்த செல்களை எல்லாம் உயிர்பித்து கொண்டே சென்றது...சூடேறிய ரத்தம் மூளையை தாக்க....விழி விரிய வெறிக்கிறான்.விழிஓரத்திலும்..அவன் இதழ்கோட்டிலும் ஆரம்பித்து விரிசல் விட்ட முகமூடியை உரித்து எடுக்கிறான்.....ஆக...
யாரிவன்..?
தொடரும்......

யாரிவன்..?
ReplyDeleteம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்......மது நிரம்பட்டும்... மயக்கம் தீரட்டும்
ReplyDelete