Tuesday, 16 April 2013









நகரம் கண்டதை தின்று 

பருத்துக் கொண்டே செல்கிறது..


இயற்கை தன்னியல்பை சுருக்கி கொண்டிருக்கிறது..


ஆறுகள் மரணிக்கும் தருவாயில்


ஜீவ நீர் கேட்டு  தவிக்கின்றன.


கார்பன் டை ஆக்ஸைடை சுவாசித்து


ஆக்சிஜனைத் தரும் மரங்கள் அருகிவிட


நகர வெம்மையில் கருகிப்போன மனம்

ஓர் ஆதி வாழ்க்கைக்கு ஆசைகொண்டு
அலைகிறது.

வனம் வளர்க்கக் கடன் கொடுக்கும்


வங்கிகள் ஏதும் உண்டா இழந்த வளம் மீண்டெடுக்க.

2 comments:

  1. ஆதி வாழ்க்கைக்கு ஆசைப்படும் மனம் கவிதை எழுதுகிறது இணையதளத்தில்

    ReplyDelete
    Replies
    1. இது வாழ்க்கை பதிவு மாப்ளை..வெறும் கவிதை யாக எழுதல.

      Delete