சதுரங்கநாயகன்
1-ம் தேதி..ஊதியம் பெற்ற நம் கதாநாயகன்..பட்ஜெட் போடும் முன்..படக்கென்று...2... 100 ரூபாய்த்தாள்களை மட்டும் பனியனின் உள்ளே செருகிகொள்கிறான்.....பரபரவென்ற உற்சாகத்துடன்....கிளம்புகிறான்...ஸூஊஊஊஊ......விசிலோடு....
அமர்க்களமாக...வீட்டுக்குள் நுழையும்முன்...செருப்பு வைக்கும் இடத்தில்
ஒரு பார்வை..அப்பாடா..யாரும் வரவில்லை...ஒரு நிம்மதியுடன்...
தே.....[என்ன இது(!) என்று வியப்புடன் பார்க்கும்....வாசகர்களுக்கு நாயகன் மனைவியை அன்புடன் அழைக்கும் ஒரு சொல்]
வர்றேங்க.......நாயகனின் மனைவி...
இந்த...
எவ்ளோ இருக்கு...
ம்ம்..இருக்குறதுதான் இருக்கும்....பாங்கே வீட்டுக்கு கொண்டுவந்தாலும் உனக்கு பத்தாது....
சரி சரி....டீ சாப்புடறீங்களா....
வேண்டாம்..நான் வெளியே போறேன்..
சாப்பிட...
வேண்டாம்
நேரத்தோட வாங்க...
எங்களுக்கு தெரியும்.....
நடந்தே கிளம்பும் நாயகனின் கால்கள்...சேர்ந்த இடம்.....
அவன் கால்கள் நின்ற இடம்....மதுபானக்கடை.... .
ரூபாய்
கைமாற...பாட்டில் இவன் வசம் வந்தது...உள்ளே சென்றதும் உள்ளே சற்று தள்ளி
ஒரு ஓரமாக இருவர் மட்டுமே அமரும் மேஜைக்கு சென்று அமருகிறான்.....
12 வயது குடும்பதலைவன்
அருகே வந்து..உணர்ச்சியற்ற கண்களாலே என்ன வேண்டும் என
கேட்கிறான்...நாயகனும் ஏதோ சொல்கிறான்...அரையிருட்டில் ஏகமான இரைச்சலில்
நம் காதில் சரியாக விழவில்லை...சரி பொறுத்து பார்ப்போம்...
தண்ணீர்பாட்டில்...சோடா..கண்ணாடி தம்ளர்... மேசையின்..வெறுமையை
நிறைத்தன..மதுபாட்டிலையும் திறந்து வைக்கிறான் நம் நாயகன்.
சுற்றிலும்
நோட்டமிட்டு..அந்த நேரத்து இருளையும்.. இரைச்சலையும்..அந்த இடத்துக்கே
உண்டான ஒரு வாசனையையும் கண நேரம் உள்வாங்குகிறான்...
ஒரு பெருமூச்சுடன்...குவளைக்குள்..மதுவை ஊற்றுகிறான்... 1பங்கு..சோடாவும் ஜோடி சேருகிறது...அதிலிருந்து கிளம்பு நுரை குமிழிகளில்..
ஏதோ
உலகம் இயங்குவதை கவனிக்கிறான்.....முதுகுதண்டில்..ஒரு சிலிப்பு
ஆரம்பிக்கிறது...புட்டத்தின் மேற்புறத்திலிருந்து ஒரு குமிழி
ஒன்று..தண்டுவடத்தின் வழியே மேல்நோக்கி பயணிக்கிறது...உடம்பின் எல்லா
ரோமக்கால்களிலும் ஒரு சிலிர்ப்பு.......
லேசாக நடுங்கும் கைகள் குவளையை எடுத்து இதழ்களில் பொருத்துகிறான்.
மது
அவனை குடிக்க ஆரம்பித்தது...உள்ளே செல்ல செல்லவே உறைந்துபோயிருந்த செல்களை
எல்லாம் உயிர்பித்து கொண்டே சென்றது...சூடேறிய ரத்தம் மூளையை
தாக்க....விழி விரிய வெறிக்கிறான்.விழிஓரத்திலும்..அவன் இதழ்கோட்டிலும்
ஆரம்பித்து விரிசல் விட்ட முகமூடியை உரித்து
எடுக்கிறான்.....ஆக...யாரிவன்..?நானேதான்.
மதுவுக்குள் மூழ்கியவன்..எழுந்த இடம் அஸ்தினாபுரம்...
அடபாவி யாரை கேட்டு ஆடின...ஏன் சுபத்ரா..இல்ல இடும்பிய வைச்சு ஆடிருக்கலாமல்ல...
நாயகன் எழுத்து...பாதங்களையே பார்த்தவாறு நிதான நடைபோடு ... வெளியேறுகிறான்.....ஆளில்லாத ரோட்டில் ஒரு விளக்கு கம்பம் மட்டும்....
ஒவ்வொரு மனிதனும் எதையோ வென்று...எதையோ தோற்று..தனியாளாக போனான்...சதுரங்க நாயகன்....
படையோடு வந்தவன்...தனியனாக வாழ்வதும்..தனியனாக சாவதும்..இந்த உலகம் நிர்ணயித்த...கொடூரனியதிகளில் ஒன்று....
எஃப்.எம் ரேடியோ ஜானகி குரலில் தேன் வழிகிறது ‘ துன்பமென்றும் ஆணுக்கல்ல அது அன்றும் இன்றும் பெண்களுக்கே’ ..
ப்ரபாகர் சிவசுப்ரமணியம்.
மதுவுக்குள் மூழ்கியவன்..எழுந்த இடம் அஸ்தினாபுரம்...
மதுபானக்கடை....அரண்மனை தார்பாராகியது.....மேசையை சூதாட்ட பலகையாக விரித்து...பகடை உருட்டப்படுகிறது....
பரிமாற வந்தவன் சகுனியாகி போகிறான்...
எத்தனை..?
ஆறு....
ஆஹ....6...
தோற்று விட்டாயடா..தர்மா...இழுத்து வாருங்கள்....ஐவரின்மனைவியை...
திரவுபதிக்கு ஒரு போன் பண்ணி பேசட்டா?
ஹலோ....நான் தோத்துட்டேன்...
சரி...உன்னை வைச்சுதான் ஆடினேன்...
அடபாவி யாரை கேட்டு ஆடின...ஏன் சுபத்ரா..இல்ல இடும்பிய வைச்சு ஆடிருக்கலாமல்ல...
சுபத்ராவ கேட்டா..அர்ச்சுன சும்மா இருப்பானா செவிட்டுல குத்துவான்....இடும்பியகேட்டா..ஹா...இந்த அரண்மனையவே இடிச்சுபோடுவான் பீம...
நீ பொது சொத்து....ஆகவே உன்னை பணையம் வைப்பது என் உரிமை...
கண்ணா......
அவர் கல்லாவுல உட்கார்ந்து இருக்கார்..இப்போதைக்கு வரமாட்டார்....
ராவணா...இந்த அண்ணன் தம்பிக தொல்லை தாங்க முடில என்னை கடத்திட்டு போயிரு...அசோகவனத்திலாவது நிம்மதியா இருக்கேன்..
ராவணன் :- தாயே நான் சிவபக்தன் அல்லவா...வரம் கொடுப்பது என் வேலை...
இவங்க பிரச்சனை முடியும் வரை அசோக வனத்தில் தாரளமாக இருக்கலாம் வாருங்கள்...
அய்யோ..அய்யோ....திரவுபதிய..ராவணன் கடத்திட்டு போறான்..
ஹ...தர்மா..பாதில நீ எந்திரிக்க கூடாது...ஆட்டத்தை முடி....
நான் தோத்துட்டேன்...அதனால...இனி போர்தான்
பூம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்....
பீமனின் பொளண்ட்ரம் ஒலிக்கிறது.....ரத்தவெள்ளம்...யானை பிளிறல்...குதிரைகளின்..கனைப்பு.....வாள்,வேல் ஒலிகள்...
சர்வ நாசம்
மிஞ்சியது இரண்டு ராஜாக்கள்..மட்டுமே..
துரியா என்னை தனியாவிட்டு போகதே....கதறுகிறான் தர்மன்..
இல்லை என் வேசம் முடிஞ்சுது...என்னை கொல்லு....நான் போகணூம்..
யாருமே இல்லையே.....தேசத்துல..யாருமே இல்லையே....ஜெயிச்சவனுக்கு..எல்லாம் சொந்தம்...தனியா நிக்குறேனே...
சூதுப்பலகையில்.....வென்ற ராஜன் மட்டும் நிற்கிறான்....
சார் கடைய சாத்தனும்..போலீஸ் வருவாங்க....சகுனி....12 வயது குடும்பதலைவனாக மாற....அரண்மனை...மதுபான கடையாகிறது...
ம்ம்...ம்ம்ம்...சரி..
நாயகன் எழுத்து...பாதங்களையே பார்த்தவாறு நிதான நடைபோடு ... வெளியேறுகிறான்.....ஆளில்லாத ரோட்டில் ஒரு விளக்கு கம்பம் மட்டும்....
படையோடு வந்தவன்...தனியனாக வாழ்வதும்..தனியனாக சாவதும்..இந்த உலகம் நிர்ணயித்த...கொடூரனியதிகளில் ஒன்று....
எஃப்.எம் ரேடியோ ஜானகி குரலில் தேன் வழிகிறது ‘ துன்பமென்றும் ஆணுக்கல்ல அது அன்றும் இன்றும் பெண்களுக்கே’ ..
ப்ரபாகர் சிவசுப்ரமணியம்.



