Wednesday, 21 November 2012

ஹேய் ஹா ஹேய் ஹா

ஏய் கிட்டே நெருங்கி வாடி கர்லா கட்டை உடம்புக்காரி
பட்டா எழுதி தாடி பஞ்சாமிர்த உதட்டுக்காரி
தொட்டபெட்டா வேணுமுன்னா தூக்கிப்போறேன் கூட வாடி
கீற்றுகொட்டா போதுமுன்னா கூத்து கட்ட நானும் ரெடி
ஸ்லேட்டு முதுகுக்காரி சாக்லேட்டு கலரு காரி
உன் cake உடம்பை தாக்க என் மீசை துடிக்குதேடி
கிட்ட நெருங்கி வாடா கர்லா கட்டை உடம்புக்காரா
பட்டா எழுதி தாடா பஞ்சாமிர்த உதட்டுக்காரா
தொட்டபெட்டா நானும் வாரேன் உப்பு மூட்டை தூக்கிப்போடா
கீற்றுகொட்டா போதுமடா கூத்துகட்ட கூட வாடா
தேக்கு முதுக்காரா சாக்லேட்டு கலரு காரா
உன் தேக்கு உடம்பை தாக்க என் ஆசை துடிக்குதேடா

பொத்தி வச்ச புயலா நீ தங்கம் கொட்டி வச்ச வயலா நீ
ஆக்கி வச்ச பிரியாணி உன்னை திங்கப்போறேன் வர்ரியா நீ
சாத்தி வச்ச கதவா நீ உள்ள ஊத்திவச்ச மதுவா நீ
சேத்து வச்ச பணமா நீ உன்னை எண்ணப்போறேன் கொடுடா நீ
தெப்பக்குளத்துல முங்கி குளிக்கையில் உன்னை தொட்ட மீனு வெந்துடுச்சே
கட்டை எறும்புகள் உன்னை கடிச்சதும் சக்கர நோயில செத்துடுச்சே

தேக்கு முதுகுக்காரா………..
ஸ்லேட்டு முதுகுக்காரி சாக்லேட்டு கலரு காரி
உன் cake உடம்பை தாக்க அண்ணன் மீசை துடிக்குதேடி
ஆஆ… அண்னா ஒருத்தி போறா லேக்காங்கொம்மா.. லேக்காங்கொய்யா
என்னடா ?
அண்னா ஒருத்திபோடா லேக்காங்கொம்மா.. லேக்காங்கொய்யா

தொட்டபெட்டா வேணுமுன்னா தூக்கிப்போறேன் கூட வாடி
கீற்றுகொட்டா போதுமுன்னா கூத்து கட்ட நானும் ரெடி
ஸ்லேட்டு முதுகுக்காரி சாக்லேட்டு கலரு காரி
உன் cake உடம்பை தாக்க என் மீசை துடிக்குதேடி

சேலை கட்டும் மயிலா நீ என்னை முட்ட வந்த முயலா நீ
உன் விரல்லுல மருதானி இப்போ வைக்க போறேன் ரெடியா நீ
டேய் சுட்டெரிக்கும் பகலா நீ என்னை சொக்கவைக்கும் இரவா நீ
ஏணி வச்சி மெதுவா நீ எல்லை தாண்டி வரும் களவாணி
வங்கக்கடலிலே வங்கபுயல் சின்னம் பட்டுன்னு கரையை தாண்டிடுச்சே
நெஞ்சிக்கடலிலே வந்தபுயல் சின்னம் உன்னை இடிச்சதும் பொங்கிடுச்சே

ஸ்லேட்டு முதுகுக்காரி…………………………………

ஸ்லேட்டு முதுகுக்காரி சாக்லேட்டு கலரு காரி
உன் cake உடம்பை தாக்க என் மீசை துடிக்குதேடி
டேய் கிட்ட நெருங்கி வாடா கர்லா கட்டை உடம்புக்காரா
வர்றேன்..
பட்டா எழுதி தாடா பஞ்சாமிர்த உதட்டதாடா
தர்றேன் ..
தொட்டபெட்டா நானும் வாரேன் உப்பு மூட்டை தூக்கிப்போடா
வர்றேன்..
கீற்றுகொட்டா போதுமடா கூத்துகட்ட கூட வாடா
வர்றேன...
ஸ்லேட்டு முதுக்காரா சாக்லேட்டு கலரு காரா
உன் தேக்கு உடம்பை தாக்க என் ஆசை துடிக்குதேடா

Tuesday, 20 November 2012

                                                         ஆனந்த அதிகாரம்

அந்த இரவு விடிந்திருக்க கூடாது..
அந்த கனவும் முடிந்திருக்க கூடாது...

ஒவ்வொரு தருணத்திலும்
உன் விழிகளில் உருவாகும்
கண்ணீர் துளி ஒவ்வொன்றும்
என் சொல் வெப்பத்தால் கருகி போனது

நீ மூச்சடக்கி...
ஒவ்வொரு துளிகளையும்...மிக துயரத்துடன்
மெதுவாக விழுங்கி கொண்டாய்...

ஆனந்தமாய்
அழக்கூட விடாத உரிமையை
யார் கொடுத்தது...அந்த அரக்கனுக்கு...

எதோச்சதிகார சாட்டையை வீசி
உன் சில ரணங்களுக்கு மருந்திட்டாலும்
பல ரணங்களில் குறுதி கொப்பளிக்க வைத்தவன்...

ஒருவன் மது மயக்கத்திலும்..
ஒருவன் மன மயக்கத்திலும்
உறங்கிய பின்
மெதுவாக விலகி சென்று
சோபாவில்
சத்தமில்லாமலும்..
ஈரமில்லாமலும்
அழுது தீர்த்துக்கொண்டாய்..
இவன் உடல் உறங்கினாலும்
மனம் உறங்காமல் கவனித்ததை நீ அறிய மாட்டாய்

விடியும் நேரத்தில்
அருகில் வந்தாய்..

இந்த உக்கிர புத்தனின்
உள்ளங்கை பற்றி
உன் நெஞ்சுக்கூட்டுக்குள் வைத்து
அமைதியாய் உறங்க தொடங்கியது
உன் கவிதைக்குஞ்சு.....

இவனைப்பற்றி
கவிதை செதுக்குகிறாய்
மரணம் என்றால் பதறிப் போகிறாய்...

நாமிறப்பினும்
என்றாவது
எங்காவது..ஏதாவது
ஒரு நூலக அறையில்
உன் கவிதை வாசிக்கப்படும்..
வாசிப்பவனின் உள் அலறலில்....

என் கல்லறை
விரிசல் வழியே
என் ஆத்மாவின் ஈரம் கசியும்..

நீ தமிழில் கரைய விட்ட
உன் ஆத்மா...
எழுத்து வடிவில் அதை கண்டு
ஆனந்த புன்னகை பூக்கும்.....

இனி
இவன் தேசத்து சட்டங்கள்

மாறிப்போகும்

இனி சுகமாக
அழுபவர்கள் மட்டும்
என் மனக்கரையில்
புதிதாக வெட்டப்படும் குளத்தில்
அழுதுகொள்ளலாம்

ஆனந்த கண்ணீர்
ருசிக்கப்படும்....தித்திப்பாக இருந்தால்
மட்டுமே அழ அனுமதி...

உப்பாக இருந்தால்
என் எல்லைதாண்டி சென்று விடுங்கள்

இது அன்பு தேசத்து
ஆணவ அரக்கனின் அறிவிப்பு..










Sunday, 11 November 2012


                           .........சதுரங்க நாயகன்......


அடடா....நம் சொந்த வேலையில்...நம் கதாநாயகனை கவனிக்காம விட்டுட்டோம்...மன்னிப்பு ...மன்னிப்பு..மன்னிப்பு....
பக்கி பய என்ன பண்ணீருக்கான்னு பார்க்கலாமா...

அதே இடம்..அதே வாசனை...ம்ம்ம்

மதுவுக்குள் மூழ்கியவன்..எழுந்த இடம் அஸ்தினாபுரம்...
மதுபானக்கடை....அரண்மனை தார்பாராகியது.....மேசையை சூதாட்ட பலகையாக விரித்து...பகடை உருட்டப்படுகிறது....

பரிமாற வந்தவன் சகுனியாகி போகிறான்...

எத்தனை..?

ஆறு....

ஆஹ....6...

தோற்று விட்டாயடா..தர்மா...இழுத்து வாருங்கள்....ஐவரின்மனைவியை...

திரவுபதிக்கு ஒரு போன் பண்ணி பேசட்டா?

ஹலோ....நான் தோத்துட்டேன்...
சரி...உன்னை வைச்சுதான் ஆடினேன்...

அடபாவி யாரை கேட்டு ஆடின...ஏன் சுபத்ரா..இல்ல இடும்பிய வைச்சு ஆடிருக்கலாமல்ல...

சுபத்ராவ கேட்டா..அர்ச்சுன சும்மா இருப்பானா செவிட்டுல குத்துவான்....இடும்பியகேட்டா..ஹா...இந்த அரண்மனையவே இடிச்சுபோடுவான் பீம...
நீ பொது சொத்து....ஆகவே உன்னை பணையம் வைப்பது என் உரிமை...

கண்ணா......

அவர் கல்லாவுல உட்கார்ந்து இருக்கார்..இப்போதைக்கு வரமாட்டார்....

ராவணா...இந்த அண்ணன் தம்பிக தொல்லை தாங்க முடில என்னை கடத்திட்டு போயிரு...அசோகவனத்திலாவது நிம்மதியா இருக்கேன்..

ராவணன்  :- தாயே நான் சிவபக்தன் அல்லவா...வரம் கொடுப்பது என் வேலை...
இவங்க பிரச்சனை முடியும் வரை அசோக வனத்தில் தாரளமாக இருக்கலாம் வாருங்கள்...

அய்யோ..அய்யோ....திரவுபதிய..ராவணன் கடத்திட்டு போறான்..

ஹ...தர்மா..பாதில நீ எந்திரிக்க கூடாது...ஆட்டத்தை முடி....

நான் தோத்துட்டேன்...அதனால...இனி போர்தான்

பூம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்....

பீமனின் பொளண்ட்ரம் ஒலிக்கிறது.....ரத்தவெள்ளம்...யானை பிளிறல்...குதிரைகளின்..கனைப்பு.....வாள்,வேல் ஒலிகள்...

சர்வ நாசம்

மிஞ்சியது இரண்டு ராஜாக்கள்..மட்டுமே..

துரியா என்னை தனியாவிட்டு போகதே....கதறுகிறான் தர்மன்..

இல்லை என் வேசம் முடிஞ்சுது...என்னை கொல்லு....நான் போகணூம்..

யாருமே இல்லையே.....தேசத்துல..யாருமே இல்லையே....ஜெயிச்சவனுக்கு..எல்லாம் சொந்தம்...தனியா நிக்குறேனே...

சூதுப்பலகையில்.....வென்ற ராஜன் மட்டும் நிற்கிறான்....


சார் கடைய சாத்தனும்..போலீஸ் வருவாங்க....சகுனி....12 வயது குடும்பதலைவனாக மாற....அரண்மனை...மதுபான கடையாகிறது...

ம்ம்...ம்ம்ம்...சரி..

நாயகன் எழுத்து...பாதங்களையே பார்த்தவாறு நிதான நடைபோடு ... வெளியேறுகிறான்.....ஆளில்லாத ரோட்டில் ஒரு விளக்கு கம்பம் மட்டும்....


ஒவ்வொரு மனிதனும் எதையோ வென்று...எதையோ தோற்று..தனியாளாக போனான்...சதுரங்க நாயகன்....

படையோடு வந்தவன்...தனியனாக வாழ்வதும்..தனியனாக சாவதும்..இந்த உலகம் நிர்ணயித்த...கொடூரனியதிகளில் ஒன்று....


கன்னித்தீவு

கன்னித்தீவு

Saturday, 10 November 2012

11-11-2012.
உடுமலைப்பேட்டை.

இது சாகித்யனுக்கு இரண்டாவது பிறந்தநாள்....





நாங்க கோவிலுக்கு போய்ட்டுவர்றோம்...

Wednesday, 7 November 2012

திலீபன் மாமா கல்யாணத்துக்கு...ராஜன் மாமா,கணேசு மாமா...                          ரவி பெரிப்பா,கபிலன் பெரிப்பா,சுந்தர் பெரிப்பா,பிரகாசு சித்தப்பா,செந்தமிழ் சித்தப்பா..எல்லாரும் வாங்க...
நான் திலி மாமாவுக்கு பொறக்க போற பாப்பாவத்தான்...கண்ணாலம் கட்டிக்கலாம்ன்னு இருக்கேன்......
இது....
சாகித்யன் பிரபாகர்




இந்த ட்ரஸ்....ரவி பெரிப்பா எடுத்து குடுத்தது....

நல்லாருக்கா.....ஹ்ஹ்ஹ்ஹாஅ

Monday, 5 November 2012

டே................மாமா..மச்சான்....மாப்ளே...கணேசகுமாரன்...கூப்புடறான்.....

அண்ணா.....தம்பி.........ஃபேஸ்புக்குக்கு போலாமா...?????

Saturday, 3 November 2012


                                      .........சதுரங்க நாயகன்......


அவன் கால்கள் நின்ற இடம்....மதுபானக்கடை.... .

ரூபாய் கைமாற...பாட்டில் இவன் வசம் வந்தது...உள்ளே சென்றதும் உள்ளே சற்று தள்ளி ஒரு ஓரமாக இருவர் மட்டுமே அமரும் மேஜைக்கு சென்று அமருகிறான்.....

12 வயது குடும்பதலைவன் அருகே வந்து..உணர்ச்சியற்ற கண்களாலே என்ன வேண்டும் என கேட்கிறான்...நாயகனும் ஏதோ சொல்கிறான்...அரையிருட்டில்  ஏகமான இரைச்சலில் நம் காதில் சரியாக விழவில்லை...சரி பொறுத்து பார்ப்போம்... தண்ணீர்பாட்டில்...சோடா..கண்ணாடி தம்ளர்... மேசையின்..வெறுமையை நிறைத்தன..மதுபாட்டிலையும் திறந்து வைக்கிறான் நம் நாயகன்.

சுற்றிலும் நோட்டடிட்டு..அந்த நேரத்து இருளையும்.. இரைச்சலையும்..அந்த இடத்துக்கே உண்டான ஒரு வாசனையையும் கண நேரம் உள்வாங்குகிறான்...
ஒரு பெருமூச்சுடன்...குவளைக்குள்..மதுவை ஊற்றுகிறான்... 1பங்கு..சோடாவும் ஜோடி சேருகிறது...அதிலிருந்து கிளம்பு நுரை குமிழிகளில்..
ஏதோ உலகம் இயங்குவதை கவனிக்கிறான்.....முதுகுதண்டில்..ஒரு சிலிப்பு ஆரம்பிக்கிறது...புட்டத்தின் மேற்புறத்திலிருந்து  ஒரு குமிழி ஒன்று..தண்டுவடத்தின் வழியே மேல்நோக்கி பயணிக்கிறது...உடம்பின் எல்லா ரோமக்கால்களிலும் ஒரு சிலிர்ப்பு.......

லேசாக நடுங்கும் கைகள் குவளையை எடுத்து இதழ்களில் பொருத்துகிறான்.

மது அவனை குடிக்க ஆரம்பித்தது...உள்ளே செல்ல செல்லவே உறைந்துபோயிருந்த செல்களை எல்லாம் உயிர்பித்து கொண்டே சென்றது...சூடேறிய ரத்தம் மூளையை தாக்க....விழி விரிய வெறிக்கிறான்.விழிஓரத்திலும்..அவன் இதழ்கோட்டிலும் ஆரம்பித்து விரிசல் விட்ட முகமூடியை உரித்து எடுக்கிறான்.....ஆக...

யாரிவன்..?
                                                                                                                       தொடரும்......






Friday, 2 November 2012

                                       .........சதுரங்க நாயகன்.......



1-ம் தேதி..ஊதியம் பெற்ற நம் கதாநாயகன்..பட்ஜெட் போடும் முன்..படக்கென்று...2... 100 ரூபாய்த்தாள்களை மட்டும் பனியனின் உள்ளே செருகிகொள்கிறான்.....பரபரவென்ற உற்சாகத்துடன்....கிளம்புகிறான்...
ஸூஊஊஊஊ......விசிலோடு....

அமர்க்களமாக...வீட்டுக்குள் நுழையும்முன்...செருப்பு வைக்கும் இடத்தில்
ஒரு பார்வை..அப்பாடா..யாரும் வரவில்லை...ஒரு நிம்மதியுடன்...

தே.....[என்ன இது(!) என்று வியப்புடன் பார்க்கும்....வாசகர்களுக்கு  நாயகன் மனைவியை அன்புடன் அழைக்கும் ஒரு சொல்]

வர்றேங்க.......நாயகனின் மனைவி...

இந்த...

எவ்ளோ இருக்கு...

ம்ம்..இருக்குறதுதான் இருக்கும்....பாங்கே வீட்டுக்கு கொண்டுவந்தாலும் உனக்கு பத்தாது....

சரி சரி....டீ சாப்புடறீங்களா....

வேண்டாம்..நான் வெளியே போறேன்..

சாப்பிட...

வேண்டாம்

நேரத்தோட வாங்க...

எங்களுக்கு தெரியும்.....

நடந்தே கிளம்பும் நாயகனின் கால்கள்...சேர்ந்த இடம்.....

                                                                                                                                   [தொடரும்]
அடர்ந்த காட்டுக்குள்ளே....ஒரு..பயணம்...
கூட பயணம் வர விருப்பப்படும் நண்பர்கள்....தங்கள்...முகமூடிகளை
கழற்றி வைத்துவிட்டு டொக்கன் பெற்று கொள்ளவும்...திரும்பிவரும் போது [தேவைப்பட்டால்] மாட்டிக்கொள்ளலாம்....
கன்னி தீவு ந்னா....சிந்துபாத்தோ...அல்லது கிளுகிளுப்பு கில்பான்ஸ்...இருக்கும்ன்னு நினைச்சுகிட்டு...வர நினைக்கும் ஜொள்ளர்களுக்கு....பெரும் ஏமாற்றமே....மிஞ்சும்...ஹஹஹஹ்....போலாமா......
இனி வரபோகும்....அதிரடி...ஆக்சன்களுக்கு....தயாராகுங்கள்...
மதுக்குவளை....அரட்டை அலம்பல்...கண்ணீர் விசும்பல்...மொக்கை காமெடி....அதிர வைக்கும் சிரிப்பு....எல்லாம் கலந்து கட்டும்  “காக்டெயில்”...